

இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேசியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் இபிஎஸ் அணியில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா ஓ.பன்னீர்செல்வத்தை அரசியலை விட்ட ஒதுக்க வேண்டும் என பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள படைபலத்தை பார்த்து பயந்து தான் இணைந்து செயல்பட வருமாறு ஓபிஎஸ் அழைப்பதாக ராஜன் செல்லப்பா தெரிவித்தார். 4 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியதால் ஒபிஎஸ் அழைப்பை நாங்கள் பொருட்படுத்தபோவதில்லை என்றார்.
