• Wed. Jan 22nd, 2025

அடிப்படை வசதி கேட்டு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மனு

ByA.Tamilselvan

Jun 20, 2022

மதுரை மாவட்டம் திண்டியூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் வசித்து வருகிறார்கள் இந்தநிலையில் அந்த பகுதியில் சாலை தெருவிளக்கு குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை அதேபோல் மழைக்காலங்களில் சாலை , மற்றும் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்ததால் வீடு விட்டு வெளியேற முடியாமல் இருக்கிறோம் இதனால் நோய் தொற்று ஏற்படுவதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு பல் முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.