• Fri. Mar 29th, 2024

ராஜபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்..,
தோப்பு காவல்காரர் கைது.

Byமகா

Feb 17, 2022

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த வழக்கில், தோப்பின் காவல்காரர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கே அய்யனார் கோவில் சாலையில் புல்லுப்பத்தி மலை பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இதில் ஒரு தோப்பில் யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் கதிர்காமன் உத்தரவின் பேரில், வனவர் குருசாமி தலைமையிலான வனக்குழுவினர் தோப்பிற்கு சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையில் இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த காவல்காரர் முத்துராஜ் (வயது 45) என்பவரை பிடித்து ராஜபாளையம் வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். விருதுநகர் மாவட்ட வன உயிரின காப்பாளர் டாக்டர் திலீப்குமார் மற்றும் உதவி வனபாதுகாவலர் மணிவண்ணன் (சிவகங்கை) ஆகியோர் முத்துராஜுடம் விசாரணை மேற்கொண்டனர். யானைத் தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தா? அல்லது வேறு மருத்துவ குணங்களுக்காக கொண்டுவரப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *