கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் உள்ளது! இவரது திரைப்படம் தென்னிந்திய திரை அரங்குகளை தாண்டி வெளிநாட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்பது அனைவரும் அறிந்ததே!
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் குஷ்பூ, மீனா ஆகியோர் முறை பெண்களாகவும் நயன்தாரா ஹீரோயினாகவும் கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்து இருப்பார்கள். தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் மிஸ் பண்ணிய ஒரு படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுன் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்த முதல்வன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ரஜினிதானாம். இந்த படத்தின் கதையை முதலில் சங்கர் ரஜினியிடம் தான் கூறினாராம். ஆனால் அப்போது நடிகர் ரஜினி பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் முதல்வன் படத்தை மிஸ் பண்ணி விட்டாராம். பொதுவாகவே ஷங்கர் எந்த படத்தின் கதையை கையில் எடுத்தாலும் முதலில் ரஜினியிடம் பேசிவிட்டு அவர் மறுத்ததால் தான் மற்ற ஹீரோக்களிடம் செல்வாராம்.