

மதுரை புறநகர் திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி சோழவந்தான் பேரூர் இளைஞர் அணி சார்பாக சோழவந்தானில் இரண்டு நாட்கள் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணியினருக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பரிசுகள் வழங்கினார். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி பி ராஜா தலைமை வகித்தார். இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணை செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் குருசாமி செல்வராணி ஜெயராமச்சந்திரன் நிஷா கௌதம ராஜா, முத்துச்செல்வி சதீஷ், அவைத்தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பால் கண்ணன், பேரூர் இளைஞர் அணி செயலாளர் முட்டை கடை காளி, குருவித்துறை அலெக்ஸ், மில்லர், தவம், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
