

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் ஆக்கிரமிப்பு எடுப்பதற்கான அளவீடும் பணி நேற்று தொடங்கியது. மார்க்கெட் ரோடு, வளையல்காரர் தெரு, துரோபதி அம்மன் கோவில் வடக்குதெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் அளவிடும் பணி நடந்தது. இதில் பேரூராட்சி செயல்அலுவலர் சகாய அந்தோணியூசின், வாடிப்பட்டி தாலுகா சர்வேயர் ஆண்டவர், கிராமநிர்வாக அலுவலர்கள் சோழவந்தான் கமலக்கண்ணன், சோலைக்குறிச்சி காளீஸ்வரி மற்றும் பேரூராட்சி,வருவாய் துறை பணியாளர்கள் அளவிடும் பணியில் கலந்து கொண்டனர்.

