
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பாஜக சார்பில் பாரத தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் கோசா பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சீனிவாசன், சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் நன்றியுரை ஆற்றினார். மண்டல் பொதுச் செயலாளர் அருண் பாண்டியன் மண்டல் பொருளாளர் ராஜ்குமார் நிகழ்ச்சிக்கான பணிகளை செய்தனர் இதில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மாநில மாவட்ட பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

