தமிழகத்தில் விரைவில் மின் கட்டண உயர்வு அமுலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு வழக்கில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்த தனிநீதிபதியின் உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்தது. இதையடுத்து மின் கட்டணங்களை உயர்த்துவது குறித்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனால் விரைவில் மின்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.