சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகரைச் சேர்ந்த 52 வயதான விவசாயி முத்துராமன். இவர் அப்பகுதியில் பம்புசெட் மோட்டார் மூலம் 3 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு மழையால் விளைநிலத்திற்கு அருகே மின்கம்பம் ஒடிந்து விழுந்தது. மேலும் மற்றொரு மின்கம்பம் சாய்ந்தது. இதனால் முத்துராமனால் பம்புசெட் மோட்டாரை இயக்க முடியாமல் சிரமத்திற்க்கு ஆளானார் முத்துராமன்.
எனவே, மின்கம்பங்களை சரிசெய்து கொடுக்குமாறு மதகுபட்டி மின்வாரிய அலுவலகத்தில் முத்துராமன் மனு கொடுத்தார். ஆனால் மின்கம்பம் இல்லை என கூறி 10 நாட்களாக அலையவிட்டனர்.
இதையடுத்து முத்துராமன் தன்னை அலையவிடுவது குறித்து மின் ஊழியர் ஒருவரிடம் மொபைலில் பேசியுள்ளார். அந்த ஊழியர் உயரதிகாரிகளுக்கு கொடுக்க, மின் கம்பம் ஊன்றும் ஊழியர்களுக்கு ஊதியம் என ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராமன், மின் ஊழியரின் பேச்சை மொபைலில் பதிவு செய்துள்ளார்.
மின்சார வாரிய ஊழியர் ஒருவருடன் பேசும் இந்த ஆடியோ பதிவில், முத்துராமன் தான் வட்டிக்கு தான் பணம் வாங்கப்போவதாகவும், கொஞ்சம் குறைத்துக்கொள்ள முடியுமா என்றும் கேட்கிறார். அதற்க்கு அந்த ஊழியர் சரியாக எந்த பதிலும் கூறாமல் மழுப்புகிறார். மற்றோரு ஆடியோ பதிவில், எ.இ க்கு தனியாக 4000 ரூபாய் வேண்டும் என்றும் கம்பம் நட வருபவர்களுக்கு நீங்கதான் கூலி தரணும்னு கறாராக பேசுகிறார் இந்த நபர்”.
இதுகுறித்து முத்துராமன் கூறியதாவது: பணத்திற்காக எதுவுமே கூறாமல் என்னை 10 நாட்களாக அலையவிட்டனர். மேலும் என்னிடம் பணம் இல்லை, வட்டிக்கு தான் வாங்க வேண்டும் என கூறியும், அலைவிட்டதோடு, இரக்கமின்றி ரூ.10 ஆயிரம் கேட்டார். அதனால் தான் அவரது பேச்சை பதிவு செய்தேன் என்றார் ஒடிந்த மின்கம்பத்தை சரி செய்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அரசு ஊழியரின் இந்த செயல் போது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.