• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

நாட்டுப்புற இசை கச்சேரியுடன் தேர்தல் விழிப்புணர்வு பேரணி..,

ByS. SRIDHAR

Mar 27, 2026

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் மேள தாளங்கள் முழங்க நாட்டுப்புற இசை பாடலுடன் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை திருமயம் தேர்தல் அதிகாரி திருமால் துவக்கி வைத்தார்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றும் எனது இந்தியா எனது வாக்கு எனவும் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை பற்றி நாட்டுபுற பாடல்கள் பாடி பேரணியாக சென்றபோது,

வாக்காளர் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியும் துண்டுப் பிரசுரம் வழங்கியும் இந்தத் தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் திருமயம் தேர்தல் உதவி அலுவலர் வரதராஜன் அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் அருள் முருகாணந்தம் உதவி காவல் கண்காணிப்பாளர் தனுசிங் அரிமளம் காவல் ஆய்வாளர் குருநாதன் வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் கிராம நிர்வாக அலுவலர் சரண்ராஜ் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.