திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் திருநாளை முன்னிட்டு, இன்று காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சுப்பிரமணிய சுவாமிக்கு பக்தர்கள் காணிக்கையின் உபயமாக வேல் சாத்தப்பட்டது. நடராஜர் சிவகாமி அம்மன் சிம்மாசனத்தில் எழுந்தருளியும், வெள்ளிப் பல்லக்கில் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!



