• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி..,

BySeenu

May 3, 2026

மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் குறித்து CSI Edu Connect 2026 கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோவை ரேஸ் கோர்ஸ் சி.எஸ்.ஐ ஆல் சோல் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் சி.எஸ்.ஐ கல்வி நிறுவனங்கள், கோவை,திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல கல்லூரி நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி,சி.எஸ்.ஐ கோவை திருமண்டல பேராயர் பிரின்ஸ் கால்வின்,சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியின் இயக்குனர் அருமை ராஜ்,சி.எஸ்.ஐ கோவை திருமண்டல உப தலைவர் ஆயர் டேவிட் பர்னபாஸ் பொருளாளர் அமிர்தம், ஆயர்கள்,திருமண்டல நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தொடர்பாக அமைக்கப்பட்ட அரங்குகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரபல கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி:-

கணிணி துறையில் தற்போதைய மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாகவும் பிற துறைகளிலும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் எனவே அது போன்ற துறைகளையும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும் என அறிவரை வழங்கினார்.