கோவை வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர் காலக்கணிதன் கார்த்திக்..
ஜோதிட ஆலோசனை,நியுமராலஜி,வாஸ்து தகவல்கள் உள்ளிட்டவற்றை கணித்து வழங்கி வரும் காலக்கணிதன் கார்த்திக் அலுவலகத்தில் மகா சுதர்சன ஹோமம்,கோமாதா பூஜை,மற்றும் கோ தானம் என முப்பெரும் விழா நடைபெற்றது..

விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜோதிட குரு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மருதாசல மூர்த்தி கலந்து கொண்டார்..
உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு ஹோமம் நடைபெற்றது..
தொடர்ந்து , நாட்டு மாடுகளை பாதுகாப்பதும், அவற்றின் இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதும் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமானது என வலியுறுத்தப்பட்டு கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி கோசாலைக்கு நாட்டு பசு தானமாக வழங்கப்பட்டது..

நிகழ்ச்சியில் பேசிய ஜோதிட ஆலோசகர் கார்த்திக் நாட்டு மாடுகள் விவசாயத்தின் அடித்தளமாக மட்டுமல்லாமல், இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் முக்கிய பங்காற்றுகின்றன என்றார்.
மேலும், வெளிநாட்டு இன மாடுகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரியது என்றும், நாட்டு இனங்களை பாதுகாக்க அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இயற்கை வேளாண்மை, கோமாதா பூஜை மற்றும் கோ தானம் போன்றவை இந்திய பாரம்பரியத்தின் முக்கிய அங்கங்களாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டு மாடுகளை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும் என்றார்.
இந்த முப்பெரும் விழாவில், சண்முகம், ராம்குமார், முத்துகுமார், யுவராஜ், பிரேமா, மைதிலி, காந்திமதி, குணவதி.,சிவகாமி உட்பட ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்..




