• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

காரமடை அருகே குட்டை நீரில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு.!

BySeenu

May 3, 2026

காரமடையை அடுத்துள்ள கணுவாய்பாளையம் பிரிவு கூரனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு(58).ஓய்வு பெற்ற சிடிசி கண்டக்டர்.இவரது மனைவி ரங்கேஸ்வரி(54). இவருக்கு ஹரிஷ்(27) என்ற மகன் உள்ளார்.இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று காலை தனது வீட்டிலிருந்து தனக்கு சொந்தமான காரில் கணுவாய்பாளையம் பிரிவு காட்டாஞ்சி மலை வழியாக வேலைக்கு சென்றுள்ளார்.அப்போது,வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த குட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.விரைந்து வந்த போலீசார் கிரேன் மூலமாக காரை பத்திரமாக மீட்டனர்.

காரை திறந்து பார்த்த போது காருக்குள் இளைஞர் ஹரிஷ் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.பின்னர்,சடலத்தை மீட்ட போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலைக்கு செல்லும் போது குட்டை நீரில் காருடன் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.