• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மாநில அளவிலானஓவியப் போட்டி 470 மாணவர்கள் பங்கேற்பு..,

BySeenu

Aug 3, 2026

குளோபல் ஆர்ட் மற்றும் எஸ்.ஐ.பி அகாடமி இணைந்து நடத்திய ‘கலர் சாம்ப் 26’ மாநில அளவிலான 11-வது ஓவியப் போட்டி, கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியை கோவை விப்கியார் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் பாபி மேத்யூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் வழங்கினார்.

நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 470-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் எஸ்.ஐ.பி அகாடமியின் நிர்வாக இயக்குனர் தினேஷ் விக்டர், குளோபல் ஆர்ட் நிறுவனத்தின் வணிகத் தலைவர் நம்ரத்தா முகர்ஜி மற்றும் கரிமா சேகல் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இது குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில்,
மாணவர்களின் கலைத்திறன், தனித்துவமான படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திலேயே இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினர். போட்டியின் முடிவில் திறம்பட வரைந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.