• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி தரப்பு அதிரடி!!

Byகாயத்ரி

Aug 25, 2022

கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார் . இதன் மூலம் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது ரத்தானது . இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் . இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்திடம் ஓபிஎஸ் தரப்போ , மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தது.

இக்கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சி எஸ் வைத்தியநாதன் தங்களது வாதங்களை தொடங்கி இருக்கிறார். எடப்பாடி தரப்பில் வைக்கும் வாதங்களாவது, தனி நீதிபதி யூகங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற சொல்லியிருக்கிறார். பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதி உத்தரவு இருப்பதாகவும், தனி ஒரு நபர் பயனடையும் வகையில் தனி நீதிபதி உத்தரவு உள்ளது. அதிமுகவினுடைய ஒன்றை கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அது இல்லை, 2,190 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கோரிக்கைகளை ஏற்று அடுத்த பொதுக்குழுவை ஜூலை 11 இல் நடக்கும் என ஜூன் 23ஆம் தேதியே அறிவிக்கப்பட்டிருந்தது. 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை தற்போது நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களாக முன்வைத்து வருகின்றார்கள்.