எடப்பாடி பழனிச்சாமி மீதான முறைகேடு வழக்கு வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான முறைகேடு வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் திடீரென இன்று விசாரணை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.