• Mon. Dec 2nd, 2024

குமரியில் கனமழை எதிரொலி.., முழுக் கொள்ளளவை எட்டியுள்ள அணைகளின் கண்கொள்ளாக் காட்சி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. குடிநீருக்கான முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியது – குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கின் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன இறச்சகுளம் அடுத்துள்ள குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள முக்கடல் அணை 25 அடி கொள்ளளவை முழுமையாக எட்டியுள்ளது – இன்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43. 94 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1174 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதேபோன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 67.36 அடியாகவும் அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 570 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றாறில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது திற்பரப்பில் 61.2 மில்லி மீட்டர் மழையும் பேச்சிப்பாறையில் 50 மில்லி மீட்டர் மழையும் ரோட்டில் 41. 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விசுவல் 1. குமரி மாவடத்தில் உள்ள அணைக் கட்டுகளில் தண்ணீர் மறுகால் பாய்தல்.- முழு கொள்ளளவை எட்டி உள்ள முக்கடல் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *