ஆந்திராவில் மின்சார ஸ்கூட்டர் எனப்படும் இ-ஸ்கூட்டர் பேட்டரி சார்ஜ் செய்யும்போது வெடித்து சிதறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சூற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும். தினசரி அதிகரித்துவரும் பொட்ரோல் டீசல் விலை உயர் வு காரணமாகவும் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மின்சாரவாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிர்பாரத விதமாக தமிழகத்தில் தொடங்கி இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் விபத்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தட்ப வெப்பநிலைக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் ஏற்புடையதல்ல என்ற கருத்தும் நிலவுகிறது
. இந்நிலையில் குறைபாடுடைய அனைத்து மின்சார வாகனங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுடன், சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்தநிலையில் மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறிய மற்றுமொரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இ-ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஆந்திராவில் ஒருவர் பலி
