• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் இ பெரியசாமி பேச்சு..,

ByPuthar Pandian P

Apr 15, 2026

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மைக்கேல்பாளையம், நிலக்கோட்டை, மட்டப்பாறை, சக்கையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கலந்து கொண்டு நிலக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு சிறப்புறையாற்றி பேசினார், கூட்டத்தில் பேசிய அவர் கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தேர்தல் அறிகையில் சொல்லாத பல வரலாற்று திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்த திட்டங்களே திண்டுக்கல் மாவட்டத்தில் 7-தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது,

வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 234 தொகுதிக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றும், முக.ஸ்டாலின் இரண்டாவது முதலமைச்சராவது உறுதி. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 5-ஆண்டுகளில் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி உள்ளதால் அதனைச் சொல்லி மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேளுங்கள். திமுக ஆட்சியில் நிலக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரி, கொடைரோடு அருகே சிறுமலையாறு நீர்த்தேக்கம், நிலக்கோட்டை வாழ் மக்களுக்கு அணைப்பட்டி பேரணையில் இருந்து குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டது. எனவே திமுக நிர்வாகிகள் இரவு பகல் பாராமல், நிலக்கோட்டையின் முதல் திமுக பெண் வேட்பாளர் எஸ். நாகஜோதியை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில் நிலக்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன் ( தெற்கு) சவுந்திர பாண்டியன் (வடக்கு) கரிகால பாண்டியன் ( மேற்கு), தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கம்பம் பாண்டியன்,மாவட்ட திமுக துணை செயலாளர் நாகராஜன் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.