

மார்ச் 7ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கும் இஃப்தார் விருந்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். இதற்கிடையே தவெக சார்பில் வரும் 7ம் தேதி நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் வெள்ளிக்கிழமை ஓய்.எம்.சி.ஏ. அரங்கில் தவெக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லீம்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.
ரமலான் மாதம் பிறையின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும். உலகின் எந்தெந்த பகுதிகளில் எப்போது பிறை தோன்றுகிறது என்பதை வைத்து நோன்பு தேதியும் பண்டிகையும் கொண்டாடப்படும். இதனால் ரமலான் பண்டிகை ஒருநாள் வரை மாறுபடும். மேலும், ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு எதுவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இஃப்தார் விருந்து வைத்து மாலை நோன்பை முடிப்பார்கள்.
அதன்படி தமிழகத்தில் நேற்று மார்ச் 2ம் தேதி முதல் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விஜய் பங்கேற்பு இதற்கிடையே தவெக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவுள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தவெக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பார் என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி! ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. வரும் 7ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கழகத் தலைவர், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

