• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மதுரையில் போதைப்பொருள் கடத்த முயன்றவர் கைது!

Byகுமார்

Jan 10, 2022

மதுரையிலிருந்து நேற்று இலங்கைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கடத்த உள்ளதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மதுரை விமான நிலையத்தில் இலங்கைப் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அப்போது மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஜவஹர் மகன் ஷகில் அஹமது (28) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது பையில் வைத்திருந்த பழைய மண்ணெண்ணெய் அடுப்பில், மண்ணெண்ணெய் இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.