• Tue. Feb 18th, 2025

பொங்கலுக்கு தமிழில் வெளியாகும் 8 படங்கள்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்திருப்பதன் காரணமாக பொங்கலுக்கு வெளியாகவிருந்த ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், வலிமை உள்ளிட்ட பெரிய படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டன.


திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதும் திரைப்படங்கள் தள்ளிவைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


இதனையடுத்து பொங்கலுக்கு குறைவான பொருட் செலவில் உருவான படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளன. அந்த வகையில் சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.


மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள நாய் சேகர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமாரின் என்ன சொல்லப் போகிறாய், விதார்த்த நடித்துள்ள கார்பன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. மேலும் மருது, பாசக்கார பய, ஏஜிபி, ஐஸ்வர்யா முருகன், நீ நீயாக இரு போன்ற படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.