• Fri. Mar 29th, 2024

கொரோனா தாக்கம் காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசன நேரம் குறைப்பு

Byகாயத்ரி

Jan 10, 2022

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.இந்தநிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ் மாதமான மார்கழியில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதனை தொடர்ந்து 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல் தங்கதேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டிற்கு அனுமதியில்லை என கோவில் முன்பு உள்ள சண்முகவிலாச மண்டபம் முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *