அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி முன்னிலை வகித்தார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரனின் உருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிர்வாகிகள் அனைவரும் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், கடலூர் தொண்டரணி வீரையன், மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணியினர், பொதுமக்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.