• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானார் டாக்டர் சரவணன்..!

ByA.Tamilselvan

Jan 4, 2023

பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
பி.டி.ஆர் மீது செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகிய அவர் திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துள்ளார். அவருக்கு மதுரை மாவட்ட தலைவர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. திமுகவில் எம்எல்ஏவாக இருந்த சரவணன், பின்னர் பாஜகவில் சேர்ந்து, தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.