• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை – 5 பேருக்கு சிறை

Byகுமார்

Jun 23, 2022

வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் , கணவர் உள்ளிட்ட 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர காவல்நிலையத்திற்கு உட்பட்ட அண்ணமார்பட்டியில் வசித்து வந்த சசிகலா என்ற பெண்ணை அவரது கணவர் மாமனார் மாமியார் நாத்தனார் உள்ளிட்ட கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சசிகலா கடந்த 2014 ஆம் ஆண்டு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
வரதட்சனை கேட்டு பெண்ணை தற்கொலைக்கு உள்ளாக்கிய இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் , வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ராமன் என்பவர் உயிரிழந்ததால் மீதமுள்ள 5 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணவன் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் , மாமியார் நாத்தனார் உள்ளிட்ட கணவர் குடும்பத்தினர் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.