• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

Byகுமார்

Jun 23, 2022

மதுரையில் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை பழங்காநத்தம் போடி லைன் பகுதியில் உள்ள குடியிருப்பில் சுற்றி திரிந்த 2 நாய்களுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்ததாக மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்தநிலையில் உயிரிழந்த நாயின் உடலை மீட்டு கால்நடை மருத்துவமனையில் உடற்கூராய்வு நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், அதே பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்கி வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது வேதனை அளிப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வீதியில் சுற்றி திரியும் நாய்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள பொதுமக்கள் முயற்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.