• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஊக்கமளிக்கின்ற புதுமைப்பெண் திட்டம் ..,

ByK Kaliraj

Mar 11, 2026

எஸ் .ஆர். பொறியியல் கல்லூரியின் மகளிர் முன்னேற்றக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடைபெற்றது.

கல்லூரியின் இயக்குநர்கள் டாக்டர் அருண்குமார், விக்னேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் வரவேற்று பேசினார் .கல்லூ ரியின் டீன் மாரிச்சாமிவாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாத்தூர் கோர்ட் மாஜிஸ்திரேட் இலக்கியா கலந்து கொண்டு பேசியதாவது: ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் பெண் கள் முன்னேற வேண்டும். இன்று பெண்கள், கல்வி, அறிவியல் தொழில்நுட் பம், மருத்துவம், அரசி யல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். பெண்கள் முன் னேற்றத்திற்காக பல திட் டங்களும், சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக ‘புதுமைப் பெண் திட்டம்’ போன்ற திட்டங்கள் மாணவிகளுக்கு கல்வி தொடர ஊக்கமளிக்கின்றன. குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், பெண் சட்டங்களும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளன என்றார். பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கும், பேரா சிரியர்களுக்கு ரங்கோலி போட்டி, அடுப்பு இல் லாமல் சமையல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், பேரா சிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிர் வாகம், மகளிர் முன்னேற்ற குழுவின் ஒருங்கிணைப்பா ளர்கள் வளர்மதி, ராமதில் கம்,ராஜேஸ்வரி, கீதா, கார்மல் சோபியா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.