• Thu. Apr 25th, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக நீதி பேசாதீர்கள்: சீமான்

ByA.Tamilselvan

Oct 16, 2022

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை யில் வெள்ளியன்று குடிவாரிக் கணக் கெடுப்பு மாநாடு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தா மல் சமூக நீதி பேசாதீர்கள். எங்களை ஏமாற்றப் பார்க்காதீர்கள். நாங்கள் ஏமாற வும் மாட்டோம். சாதி வாரிக் கணக் கெடுப்பு மட்டுமல்ல மொழிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும். நாங்கள் கேட்பது ஒடுக்கப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கான உரிமை. இன்றை க்கு ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் சுரண்டப்பார்க்கிறான். தமிழகத்தில் அக முடையர். வன்னியர், கவுண்டர், படை யாச்சி எண்ணிக்கையை கணக்கெடுத்து அதற்கேற்றார் போல் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். நாங்கள் ஏன் குடிவாரி கணக்கெடுப்பு கேட்கிறோம். உதாரணத்திற்கு ஒரு வீட்டில் ஒரு கிழவி மட்டும் இருந்தால் அவருக்கு ரேசனில் 10 கிலோ அரிசி கொ டுக்கிறார்கள். ஒரு வீட்டில் பத்துப்பேர் வசித்தாலும் அவர்கள் வைத்துள்ள ரேசன் அட்டைக்கும் பத்து கிலோ அரிசி தான்.
பொருளாதார அளவுகோல் மாறக் கூடியது. எனவே பொருளாதார இட ஒதுக்கீடு கூடாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது கூடாது. அவரவர்களை அவர்க ளது சாதிப் பட்டியலில் சேர்த்து அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும். குடிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தான் கல்வி, வேலைவாய்ப்பு, அரசி யல், அதிகாரம் ஆகியவற்றை பெற முடியும். சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தா மல் சமூக நீதி பேசாதீர்கள். எங்களை ஏமாற்றப் பார்க்காதீர்கள். நாங்கள் ஏமாற வும் மாட்டோம். இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *