• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆர்.எஸ்.எஸ், பாஜகவை எதிர்ப்பதை முதல் பணி- மல்லிகார்ஜூனகார்கே

ByA.Tamilselvan

Oct 16, 2022

ஆர்எஸ்எஸ்,பாஜகவை எதிர்ப்பதே எனது முதல் பணி என காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். பாஜகநாட்டை மதத்தால் பிரிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே விமர்ச்சித்துள்ளார்.மேலும் அவர் பேசும் போது.. “தேர்தல் வாக்குகள் எனும் கண்ணோட்டத்திலேயே பாஜகவினர் அனைத்தையும் அணுகுகின்றனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதும்,மதத்தால் நாட்டை பிளக்கும் பாஜக,ஆர்.எஸ்.எஸ்ஐ எதிர்ப்பதுமே எனது பணி” என்று தெரிவித்தார். நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொரும்பாலனோரின் ஆதரவு கார்கேவுக்கே உள்ளது என்பது குறிப்பித்தக்கது.