• Wed. Feb 12th, 2025

மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது

ByKalamegam Viswanathan

Dec 25, 2024

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவில் கந்தூரி நடத்த ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என போலீசார் தடை விதித்தது.

திருப்பரங்குன்றத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் 50க்கும் மேற்பட்டோர் எதிர்த்து திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் வழியில் போலீஸாரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கணேசன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா மற்றும் காவல்துறை உதவி ஆணையர்கள் சீதாராமன், குருசாமி சண்முகம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன் படாததால் போலீஸார் கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் செயலாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மகாலில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனைக் கண்டித்து திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா, பள்ளிவாசலில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பள்ளிவாசலில் அவசர கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது..,

ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் திமுக அரசிற்கு ஆதரவளித்ததால் அதிகாரிகள் எதிர்க்கிறார்களா? திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜமாத் செயலாளர் பேட்டி..,

இன்று காலை ராஜபாளையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு கந்தூரி வழிபாடு செய்வதற்காக வந்த இஸ்லாமியர்களை, காவல்துறையினர் மலைமீது உயிர்பலி கொடுக்கக் கூடாது என தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

திருப்பரங்குன்றம் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் களைய மறுத்ததால் எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதனால் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் செயலாளர் ஆரிப்கான் கூறுகையில்:

இன்று காலை ராஜபாளையத்தில் உள்ள மலப்பட்டியை சையது அபுதாகிர் என்பவர் தனது குடும்பத்திருடன் சேர்ந்து கந்தூரி நேர்த்திக்கடன் செலுத்த ஆடு வெட்டுவதற்காக வந்திருந்தவர்களை ஆடுடன் வந்தார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ஆடு, கோழி பலியிடக் கூடாது எனக் கூறி காவல்துறையினர் தடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்டர் காப்பி உள்ளதா என நாங்கள் கேட்டதற்கு அவர்கள் தரவில்லை மேலும் சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையை வைத்து சில அரசியல் நடைபெறுகிறது.

1920 இல் லண்டனில் நடைபெற்ற வழக்கின் போது இந்த மலை எங்களுக்கு என தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு விஷயமும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் உரிமைகளை வாங்கி வருகிறோம். நாகூர் கோரிப்பாளையம் போல இங்கும் 400 ஆண்டுகளாக கந்தூரி வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் திமுக அரசிற்கு ஆதரவளித்ததால் அதிகாரிகள் எதிர்க்கிறார்களா என தெரியவில்லை. திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து ஜமாத் தார்களையும் அழைக்க உள்ளோம்.