• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாய்களுக்கும் சமூகம் உண்டு

ByAlaguraja Palanichamy

Jul 9, 2022

செல்லப்பிராணிகள் என்றாலே நம் நினைவில் முதலில் வருவது நாய்தான். அதிலும் எத்தனை வகைகள். மனிதனை விட நாய்கள் நன்றியுள்ளது என பழமொழி உண்டு. அது நிஜம் என்று நிரூபிக்க பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகின்றனர். அப்படி நாய் இனத்தில் மிகவும் விலை உயர்ந்த ஹஸ்கி நாய்களின் உதவி மனபான்மையை மற்றும் அதன் சிறப்புகள் பற்றி தான் இன்று ஒரு தகவல்.

நாய்களில் பல வகைகள் உண்டு. அந்த இனத்தில் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய்கள் எஸ்கிமோக்களுக்கு குறிப்பாக பனிச்சறுக்கின் சமயத்தில் பெரிதும் உதவக் கூடியவை. இவைகள் தான் எஸ்கிமோக்களின் பனிச்சறுக்கு வண்டியை இழுத்துச் செல்கிறது. அத்துடன் கடும் குளிரைத் தாங்கக் கூடிய இவைகள் அதிக விசுவாசம் கொண்டவையும் கூட. குளிரைத் தாங்கும் விதத்தில் அதிக ரோமங்களைக் கொண்ட இந்த வகை நாய்களுக்கு ஓநாயை பிடிக்காது. ஆனால், இவைகள் பார்ப்பதற்கு ஓநாய் போலத் தான் இருக்கும்.பெண் ஓநாய் உடன் கூடும் ஆண் ஹஸ்கி நாய்களை மற்ற நாய்கள் சேர்ந்து கொன்று விடும். அதுவே பெண் ஹஸ்கி நாய் ஓநாய் உடன் கூடினால் ஒன்றும் செய்யாமல் விட்டு விடும்.

12 நாய்கள் சேர்ந்து எஸ்கிமோக்களின் பனிச் சறுக்கு வண்டியை இழுத்துச் செல்லும். இந்த நாய் கூட்டத்தின் தலைமை நாய் ஒழுங்காக அனைத்து நாய்களும் சேர்ந்து வண்டியை இழுக்கிறதா என்று முன்னும், பின்னும் சென்று மேற்பார்வை பார்க்கும். பெரும்பாலும் அந்தத் தலைமை நாய் பெண்ணாகத் தான் இருக்கும். அதிக கொழுப்பான மாமிச உணவுகளை இந்த வகை ஹஸ்கி நாய்கள் விரும்பி உண்ணும் இயல்புடையது.

ஹஸ்கி அளவு சிறியதாக உள்ளது, உயரம் 56 செ.மீ. மணிக்கு 60 செ.மீ. வரை, மற்றும் குறைந்த எடை (அதிகபட்சம் 28 கிலோ). ஆனால் சைபீரியன் ஹஸ்கி ரைடர்ஸ் அயராது பல மணி நேரம் ஒரு வரிசையில் கடுமையான சூழல்களில் கொண்டு செல்லமுடியும். இயல்பில் பாதுகாப்பு காவலர்கள் அவற்றின் பயன்பாடு நீங்கலாக ஒரு மிக நட்பு நாய் ஆகும். ஆர்டிக் பகுதியில் காணப்படும் நிறைய நாயினங்கள், குறிப்பாக சைபீரியன் நாயினம் வடக்கு ஆசியப்பகுதிகளில் காணப்பட்ட தைமூர் ஓநாய் இனங்களுடன் ஒத்து காணப்படுகின்றன.

சைபீரியன் ஹஸ்கி நாயினங்கள் பெரும்பாலும் குளிர் நிறைந்த பிரதேசங்களில் இருந்தே தோன்றின. அதனால், அவற்றின் தோல் கடும் குளிரினைத் தாங்கும் அளவில் அமைந்திருக்கும். இவற்றின் தோல் அமைப்பு இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இந்த தோல் அமைப்பு மூலம் அவற்றால் மைனஸ் 50 டிகிரி முதல் மைனஸ் 60 டிகிரி வரை குளிரினைத் தாக்குப்பிடிக்க முடியும்.

சுருக்கமாகச் சொன்னால் ஹஸ்கி நாய்கள் எஸ்கிமோக்கள் வாழ்க்கையில் இன்றி அமையாதது. இந்த நாய்கள் இல்லாமல் எஸ்கிமோக்களுக்கு வாழ்க்கையே இல்லை என சொல்லலாம்.