• Sat. Feb 15th, 2025

நாயின் தாய்ப்பாசம் வைரல் வீடியோ

Byவிஷா

Jan 22, 2025

துருக்கி நாட்டில் மழையில் நனைந்து சுயநினைவு இழந்த தனது குட்டியை தாய் நாய் ஒன்று பெட் கிளினிக்குக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு அவசரமாக கால்நடை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் துருக்கியில் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி காட்சி இணயத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த உருக வைக்கும் காட்சியானது தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பாசப்பிணைப்பை உணர்த்துகிறது. துருக்கியின் இஸ்தான்புல்லில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது, மழையில் நனைந்த சுயநினைவு இழந்த தனது குட்டியை முதலுதவி செய்வதற்காக வாயால் கவ்விக்கொண்டு அருகில் இருந்த கால்நடை மருத்துமனைக்கு எடுத்து சென்றது.
இந்த காட்சிகள் மருத்துமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. உடனே, அங்கிருந்த கால்நடை மருத்துவர் சிகிச்சை அறைக்கு தூக்கி சென்று, நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நாய்க்குட்டிக்கு ஊசி போட்டு, ஈரமான உடல்களை பெட்ஷீட்டால் உலர்த்தி எடுத்தனர். இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக, நாய்க்குட்டி உயிர் பிழைத்தது. இப்போது இரண்டு நாய்க்குட்டிகளும் தாயுடன், தொடர்ந்து பராமரிப்பிற்காக கிளினிக்கில் உள்ளன. அதன் முழு காட்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பலரும் அந்த தாய் நாயின் அறிவு பூர்வமான செயலுக்கும், மருத்துவர்களின் உதவிக்கும் நன்றி தெரிவித்து கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.