பழனி நகரில் செயல்பட்டு வருகிறது போகர் புலிப்பாணி சித்த வைத்திய சாலை. சித்தர் புலிப்பாணி வாரிசுகள் வழிவந்த மருத்துவர் கல்பனா புலிப்பாணி மற்றும் மருத்துவர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சித்த வைத்தியம் செய்து வருகிறார்கள்.

நீண்ட நாட்களாக சிறுநீரக கல் அடைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட தேனியைச் சேர்ந்த செல்வம் என்பவர் மருத்துவமனைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வரந்துள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுநீரக குழாயில் கல் அடைப்பின் அளவை தெரிந்து நமது முன்னோர்கள் பயன்படுத்திய சித்த ஆயுர்வேத வைத்தியத்தின் படி மருந்துகள் தயாரித்து வழங்கியுள்ளனர். சித்த மருத்துவகளை எடுத்துக்கொண்ட செல்வத்திற்க்கு சில நாட்களில் சிறுநீரகக் குழாயில் இருந்த கல் கரைந்து வெளியேறி உள்ளது.
வெளியேறிய கல சுமார் 1.5 Cm அளவில் இருந்துள்ளது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என கூறிய நிலையில் சித்த வைத்திய மருந்துகள் எடுத்துக்கொண்டதன் மூலம் கல் வெளியேறியதால் செல்வம் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இரண்டு சென்டிமீட்டர் வரை கல் அடைப்பை சித்த வைத்தியம் மூலம் எளிமையாக சரி செய்ய முடியும் என மருத்துவர் கல்பனா மற்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.