• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

படங்களை தியேட்டரில் பார்ப்பதுதான் பெஸ்ட்..,

ByVasanth Siddharthan

May 20, 2025

திண்டுக்கல் தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் சூரி மாமன் படம் குறித்து திண்டுக்கல் மக்களிடம் கேட்டறிந்து, பொதுமக்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,

“மாமன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. திரையரங்குகள் அனைத்திலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

கொஞ்சம் கூட படத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. வருடம் வருடம் குடும்ப சார்ந்த படங்கள் எடுக்க ஆசைப்படுகிறேன். படத்தை வெற்றி படமாக மாற்றிய தாய்மார்களுக்கு மிக மிக நன்றி. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் குடும்பத்திலும் இது போன்று நடந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து குடும்பத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பல நபர்கள் பலவிதமான தங்கள் வாழ்க்கையில் நடந்ததை என்னிடம் பகிர்ந்துள்ளனர்.

சினிமா என்று இல்லாமல் அனைவரின் வாழ்க்கையின் இணைக்கக்கூடிய படமாக இது இருக்கும்.

கதாநாயகனாக தொடர்ந்து வெற்றி படங்கள் வந்து கொண்டே இருக்கிறது இருந்தாலும் மக்களே கூறுங்கள் நகைச்சுவை நாயகனாக இருக்க வேண்டுமா அல்லது கதாநாயகனாக நடிக்க வேண்டுமா என்று. எங்கு இருக்க வேண்டும் என்பதை மக்களே கூறட்டும்.

தற்போது இங்கு இருப்பதற்கு மக்களே காரணம். மக்கள் வரவேற்பு இல்லாமல் எந்த ஒரு விஷயமும் நடக்காது. தற்போது எங்களது உணவகம் மக்கள் வரவேற்பு காரணமாக உயர்ந்துள்ளது.

நகைச்சுவை என்பது எல்லோரிடமும் இருக்கும். கதாநாயகனாக நடித்தாலும் நகைச்சுவை கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நகைச்சுவைக்கு என தனி உருவம் கிடையாது.

பெரிய கதாநாயகருடன் நகைச்சுவை நடிகராக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு

கதாநாயகனாக தற்போது நடிக்கும் வாய்ப்புக்கு இடையூறு இல்லாமல் பெரிய நடிகருடன் நகைச்சுவை வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நடிப்பேன்.

சமூக வலைதளங்களில் புது படங்கள் வெளியாகும் போது அதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.

நல்ல படங்களை பல கோடி செலவு செய்து எடுத்துவிட்டு இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் எப்படி வரும், மக்கள் வரவேற்பு கொடுப்பார்களா என கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கும் பொழுது தவறான முறையில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

புது படங்களை திருட்டுத்தனமாக சமூக வலைதளங்களில் வெளியிடுவது மற்றொருவர் குழந்தையை கொண்டு வந்து கொள்வதற்கு சமம்

இதனை செய்பவர்கள் பல வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள் மக்கள் இதனை வரவேற்க கூடாது.

பல வருடங்களாக அனைத்து அரசுகளும் இதனை ஒழிக்க பல வழிகளை செய்து வருகின்றனர். ஆனால் தற்போது மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

என்ன இருந்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்பது எங்கும் கிடைக்காது.

சமூக வலைதளங்களில் படங்கள் பார்த்தாலும் படம் நன்றாக இருந்தால் மீண்டும் தியேட்டரில் வந்து மக்கள் பார்க்கின்றனர். மக்கள் தியேட்டருக்கான வரவேற்பு கொடுத்து தான் வருகின்றனர்.

FMS கொடுப்பதால் தான் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு

அப்பொழுதுதான் வெளிநாடுகளுக்கும் படங்கள் சென்று சேரும். நல்லது நடக்க வேண்டும் என 4 பேர் நினைக்கும் பொழுது 2 பேர் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.