• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

மே-24 கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி

ByVasanth Siddharthan

May 18, 2025

கொடைக்கானலில் 62- வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழாவனது மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் கோடைவிழானது ஒன்பது நாட்கள் நடைபெறும் என்று திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியாளர் சரவணன் அறிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் நிலையில் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்கு கொடைக்கானலுக்கு பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், கோடை விடுமுறையை கொண்டாடும் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வருடம் தோறும் பிரைன் பூங்காவில் மலர்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று 62 -வது மலர் கண்காட்சி காண முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் கொடைக்கானல் வந்த நிலையில், கொடைக்கானல் அமைந்துள்ள ரோஜா கார்டன் மற்றும் பிரையண்ட் பூங்காவை பார்வையிட்ட தோட்டக்கலை மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டநிலையில், கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது, 62 -ஆவது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழாவானது மே 24 -ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் என்று கூறினார். இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், படகு போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் அமைச்சர்களான ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

அதேபோல் கொடைக்கானலில் பெப்பர் அருவி ஆனது புதிய சுற்றுலாத்தலமாக அரசு கட்டுப்பாட்டுடன் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 5 மேற்பட்ட அருவிகள் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் சுற்றுள்ள பயணிகளுக்கு அனுமதிக்க படும் எனவும் தெரிவித்தார்.