

மைசூர் பல்கலைக்கழகம் மறைந்த கன்னட நடிகரான புனித் ராஜ்குமாருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவ படுத்தியுள்ளது.
இது குறித்து மைசூர் பல்கலை கழகத்தின் துணைவேந்தரான ஹேமந்த்ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா துறையில் நடிகர் புனித்ராஜ் குமார் ஆற்றிய பங்களிப்பும், அவர் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளும் அளப்பரியவை. அவருக்கு எங்கள் பல்கலை கழகம் சார்பில், டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. வருகின்ற மார்ச் 22-ந்தேதி நடக்க இருக்கின்றது. மைசூர் பல்கலைகழகத்தின் 102-வது பட்டமளிப்பு விழாவில் புனித ராஜ்குமார் சார்பில் அவருடைய மனைவி அஸ்வினி பெற்றுக்கொள்ள இருகின்றார்.” என்று கூறியுள்ளார்.