

ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற- தாழ்வுகளுடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்பனையானது.
இதனையடுத்து, இன்று தங்கம் விலை சற்றே குறைந்து இன்று காலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35 ஆயிரத்து 440-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 430ஆக உள்ளது.
மேலும், வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.67 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-க்கு விற்றது.

