சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தத்து எடுத்து வளர்க்க அவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி ,அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஆண் குழந்தையை 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி சில நாட்களாக வளர்த்து வந்தனர். இந்நிலையில் வயதான தம்பதிகள் குழந்தையை வளர்ப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சேலம் குழந்தைகள் நலக்குழு அதிகாரி ஷீலா நேற்று அங்கு சென்று குழந்தையை மீட்டு காப்பகத்தில் குழந்தை பாதுகாப்பாக தங்க வைத்தனர். இது குறித்து சின்ன கண்ணுவிடம் அதிகாரிகள் விசாரித்த போது 30 நாட்களுக்கு முன்பு குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு வாங்கியதை கூறினர்.
மேலும்,தனக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சொத்து உள்ளதாகவும், வாரிசு இல்லாததால் குழந்தையை விலை கொடுத்து வாங்கியதாகவும் தெரிவித்தனர் . இதுகுறித்து வழக்கு பதிவி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .