தமிழகத்தில் கடந்த 19ம் தேதி உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்றுது! இதனையடுத்து நேற்று வாக்கு எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைகழக வளாகத்தில், காலை 8 மணி முதல் தொடர்ந்து நடை பெற்று வந்தது, இதனிடையே கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் 24 வார்டுகளில் 140 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 20,909 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் திமுக-16 வார்டுகளையும்,திமுக கூட்டணி கட்சியான மதிமுக-1 இடத்தையும், அதிமுக 4 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதில் நகர் மன்ற தலைவருக்கும் மற்றும் துணை நகர் மன்ற தலைவர் பதவிக்கும் திமுக கூட்டணி கட்சியினர் தனி பெருமான்மையுடன் கொடைக்கானல் நகராட்சியை கைப்பற்றினர். இந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் 5வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதே போன்று பண்ணைக்காடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 5877 வாக்குகள் மட்டும் பதிவாகிருந்தன. இதில் திமுக 10 இடங்களையும்,திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 1 இடத்தையும், அதிமுக 4 இடங்களையும் வெற்றி பெற்று பேரூராட்சி தலைவர் பதவிக்கும் மற்றும் துணை தலைவர் பதவிக்கும் திமுக கூட்டணி கட்சியினர் தனி பெருமான்மையுடன் கொடைக்கானல்-பண்ணைக்காடு பேரூராட்சியை கைப்பற்றினர்.
இதனைதொடர்ந்து வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் அதிகாரியால் வெற்றி பெற்ற சான்றிதழ்களும் வழங்கப்பட்டது, மேலும் கொடைக்கானல் நகராட்சி மற்றும் பேரூராட்சியை திமுக கூட்டணி கட்சியினர் கைப்பற்றியதால் திமுகவினர் வெற்றிபெற்ற வேட்பாளர்களை தோளில் தூக்கியும்,பட்டாசுகள் வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.


