• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஒரே போஸ்டரில் மூன்று டார்க்கெட் செய்த திமுக

Byவிஷா

Jan 7, 2025

ஆளுநரைக் கண்டிக்கும் விதமாக திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ஒரே போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில் தமிழக ஆளுநர் ரவி தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என கருதி அவையை விட்டு உரையை வாசிக்காமல் வெளியேறிவிட்டார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் தான் ஆளுநர் வெளியேறியதாக கூறிய நிலையில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேசினார்.
எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு ஆளுநரை வெளியேற வைத்துவிட்டனர் என்று கூறிய நிலையில், அண்ணாமலை திமுக அரசியல் தங்களுடைய நிர்வாக தோல்வியை மறைக்க ஆளுநர் மீது பழி போட்டு திசை திருப்புகிறது என்று கூறினார். இந்நிலையில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு தற்போது சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ஆளுநர் ரவி பேசும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கைகட்டி முன்னேற்பது போன்றும் அண்ணாமலை கட்டிடத்திற்குள் இருந்து ஒளிந்து நின்று எட்டிப் பார்ப்பது போன்று அந்த போஸ்டரில் தமிழ்நாட்டில் அத்து மீறும் ஆளுநர், அவரைக் காப்பாற்றும் பாஜக மற்றும் அதிமுக கள்ளக் கூட்டணி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ள நிலையில், GetOutRavi என்ற வாசகத்தையும் எழுதியுள்ளனர். இது தற்போது எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மேலும் இந்த போஸ்டர் வைரலாகி வரும் நிலையில் போஸ்டர் ஒன்றுதான் ஆனால் டார்கெட் மூணு என்பது போல் பதிவிட்டு வருகிறார்கள்.