

பல்லடத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒன்றிய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு நிதி வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. ஏறக்குறைய 4034 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு வராததால் அதன் மூலம் பயனடைந்து வந்த பெண்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது .இந்த நிலையில் உடனடியாக ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும் என திமுக சார்பில் பல்லடம் மேற்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருடாதே திருடாதே சம்பளக் காசை திருடாதே, என பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


