


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகராட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.

மேலும் காலை 11 மணியளவில் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சியில் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாகியும் வராததால் வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவர்கள் சிலர் நிகழ்ச்சியில் பங்கேற்காமலே திரும்பிச் சென்றனர். பின்னர் 3 மணி நேரத்திற்கு பிறகு அமைச்சர் சாமிநாதன் வருகை தந்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மேடையில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் அமர்ந்ததால் தாட்கோ துணைஆட்சியர் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் சபரிகிரி ஆகியோர் நிகழ்ச்சி முடியும் வரை மேடையில் ஓரமாக நின்ற காட்சிகள் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

