• Sun. Dec 1st, 2024

ஆற்காட்டிலும் திமுக கொடி பறக்குது..!

Byகாயத்ரி

Feb 22, 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தம் உள்ள 30 வார்டுகளில் திமுக 17 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிக வார்டுகளில் திமுக வெற்றி பெற்றிருப்பதால் ஆற்காடு நகராட்சி திமுக வசமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *