தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.
இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கம் இதுவரை 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் வாலாஜாபாத் 3-வது வார்டு, புதுக்கோட்டை 4-வது வார்டு, நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் ஒரு வார்டு, தேனி அனுமந்தன்பட்டி பேரூராட்சி 14-வது வார்டு ஆகியவற்றில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி 136-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் அறிவுச்செல்வி திமுக வேட்பாளரை விட அதிக வாக்கு பெற்று முன்னிலையில் உள்ளார்.