• Sun. Mar 16th, 2025

திமுக செய்ததை காட்டிலும் செய்யாது தான் அதிகம்.., அடித்துச் சொன்ன ஆர்.பி உதயகுமார்!

திமுக செய்ததை காட்டிலும் செய்யாது தான் அதிகம், இமேஜ் இந்த இரண்டு ஆண்டுகளில் 100% படுபாதளத்தில்  சென்றுவிட்டது என்று ஆர்.பி உதயகுமார் பேசிய பேச்சு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது பற்றி நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ..,

திமுக அரசு இந்த இரண்டு ஆண்டுகளில் சாதித்ததை காட்டிலும், சறுக்கல் தான் அதிகமாக உள்ளது. திமுகவின் இமேஜ் 100 சகவீதம் அதல பாதாளத்துக்கு சரிந்து விட்டது. நீட் தேர்வை ரத்து செய்வோம், கல்விக்கடனை ரத்து செய்வோம், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம், முதியோர் ஓய்வுத்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்தி தருவோம், கேஸ் மானியம் வழங்குவோம்,  பெட்ரோல், டீசல் விலை குறைப்போம், மாதம் ஒரு முறை மின் கட்டணம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் என கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதியை எதையும் செய்யவில்லை.

 கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் அரசு தயாரித்த சில வார்த்தைகளை தவிர்த்து, சில வார்த்தைகளும் சேர்த்து வாசித்தார். இதை திருத்தம் செய்யக்கூடாது என்று முதலமைச்சர் தீர்மானத்தை நிறைவேற்றினார். திமுக அரசு  கண்ணியம் குறைவாக செய்ததை  தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக  மக்களிடத்தில் வரவேற்பு பெற்ற திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கண்ணி திட்டம், 2000மினி கிளினிக் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் இது போன்ற  திட்டங்களுக்கு மூடு விழா கண்டு விட்டனர்.

 மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, புதிய திட்டங்களும் நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் கஞ்சா அதிகரித்து உள்ளது கஞ்சாவால் கொலைகள்  சர்வசாதாரணமாக மாறிவிட்டது. ஆணவக் கொலை,அரசியல் கொலை, தூத்துக்குடியில் மணல் கொள்ளையை தட்டி கேட்ட அரசு ஊழியர் படுகொலை, சேலத்தில் மணல் கொள்ளைதட்டி கேட்ட அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் இதனால் அரசு  ஊழியர்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

எடப்பாடியார் ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசாக 2,500 வழங்கப்பட்டது .ஆனால் 2022 ஆண்டில் வழங்கிய 21 பொங்கல் தொகுப்பில் உருகிய வெல்லம், புளியில் பல்லி என தரம் குறைந்த பொருளை வழங்கி அதன் மூலம் தன்னுடைய  இமேஜை திமுக சரித்துக் கொண்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவு நீர் கட்டணம் உயர்வு என மக்களிடத்தில் மிகப் பெரிய பொருளாதார சுமையை அரசு ஏற்றிவிட்டது. மகளிர் பேருந்து திட்டத்தில் பெண்களுக்கு எந்த பலனும் தரவில்லை.

சட்டமன்றத்தில் 12 மணி நேரம் வேலை மசோதா, திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் டாஸ்மார்க் விற்பனை செய்ய சிறப்பு அனுமதி என்று அறிவித்தபோது எடப்பாடியார்  கடும் கண்டனத்தை தெரிவித்தார் அதன் பின் வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலம் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.இது எல்லாம் முதலமைச்சர் தெரிந்து செய்தாரா, அல்லது தெரியாமல் செய்தாரா என்று மக்களே கேள்வி எழுப்பி உள்ளனர்.கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலி, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 3600 கோடி ரூபாய் இந்த வருமானம் எங்கு செல்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

முதலமைச்சர், ஆளுநர் மீது கடிதம் யுத்தத்தை நடத்துகிறார் ,அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதலமைச்சர் துடியாய் துடிக்கிறார். 30 ஆயிரம் கோடி ஊழல் குறித்து அமைச்சர் ஆடியோ வெளியிட்டவுடன் அவரது இலாகா மாற்றப்பட்டது.

அமைச்சர்கள் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் பேசி வருகின்றனர் ஒரு அமைச்சர் ஓசி பஸ் என்றும், இன்னொரு அமைச்சர் மக்கள் கொடுத்த மனுவை தலையை அடிப்பதும், இன்னொரு அமைச்சர் கல்வீசி எரிவதும், அமைச்சர் துரைமுருகன் மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தி பேசினார். 

தனது தந்தை நினைவாக கடலில் பேனா சிலை வைப்பதற்கு பிடிவாதமாக உள்ளார் .கலைஞர் பெயரில் நூலகம், மருத்துவமனை, பேருந்து நிலையம் என கருணாநிதியின் பெயரில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஒரு திருமண விழாவில் முதலமைச்சர் நான் எதிர்க்கட்சியாக இருந்தபோது தீமைகள் தைரியமாக செய்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.இதன் மூலம் நாங்கள் ஆட்சிக்கு வர எதையும் செய்வோம் என சொல்வது போல் உள்ளது.

 சட்டமன்றத்தில் பல்வேறு எதிர்ப்பு மீறி 17 மசோதாக்களை நிறைவேற்றினர், நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவில் நீர் நிலைகளை தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் எந்த பிரச்சனையின்றி ஆக்கிரமிப்பு செய்து கொள்ளலாம், ஏற்கனவே ஆக்கிரமிப்பு இருந்தாலும் இந்த சட்டத்தின் மூலம் வசப்படுத்திக் கொள்ளலாம் என்று நிறைவேற்றி உள்ளார்.இதன்மூலம் கனிம வளங்கள் பரிபோகும் அபாயம் உள்ளது.

ஒவ்வொரு தொகுதிகளில் 10 கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.  இதுகுறித்து பட்டியல் குறித்தும் கிணற்றில் போட்டு கல்லாக உள்ளது.

 ஏற்கனவே தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத நிலையில் ஏற்படுத்தி விட்டனர் .தற்போது தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இருந்தது .தற்போது கல்வியும் அடிப்படையில் என்ற சட்டத்தை உருவாக்கி உள்ளனர் இதன் மூலம் தேசிய விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பங்கேற்பது தடை ஏற்படும்.

 முதலமைச்சர் திட்டங்களுக்கு குழுக்களுக்கு தான் அமைக்கிறார் இது வரை 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, இந்தக் குழு பணி என்ன? எங்கே போச்சு என கேள்வியாக உள்ளது. 

மக்களின் வரிப்பணத்தில் வளர்ச்சி திட்டங்களை செய்யாமல், அதில் விளம்பரம் செய்யும் அரசாக உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் இருள் சூழ்ந்து விட்டது விரைவில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார் என கூறினார்.