• Mon. Apr 21st, 2025

மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை

ByKalamegam Viswanathan

Feb 1, 2025

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி: மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை விடுத்துள்ளார்.

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வருகிற மூன்றாம் தேதி வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி நடத்தி அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை கழகத்தினருக்கு போதித்தவர், எல்லோராலும் பேரறிஞர் அண்ணா என்று போற்றப்படுபவர், தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் பெரும் தொண்டாற்றியவருமான அறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 03.02.2025 திங்கள்கிழமை மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திடும் நிகழ்வு காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. முன்னதாக வாடிப்பட்டி மதுரை மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலகம் முன்பாக இருந்து அமைதி பேரணி புறப்பட உள்ளது எனவே இந் நிகழ்வுகளில் மதுரை வடக்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட மாவட்டக் கழக, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர் என அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும்,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தமது அறிக்கையின் மூலமாக கழகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.