• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சிறப்பு குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி இயங்கி வருகிறது. இதில் மனவளர்ச்சி குன்றியவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தனது மகளுடன் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் கேக்வெட்டி புத்தாண்டை கொண்டாடி அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார்.

இதில் அன்பகம் தாளாளர் ஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.