

தமிழக அரசின் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மேம்பாட்டு பயிற்சி கடந்த மார்ச் 27-ம் தேதி முதல், ஜூன் 27_ம் தேதி வரை நடைபெற்ற பயிற்சி நிறைவு பெற்றது.
இந்த பயிற்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 39_ மீனவ சமுக இளைஞர்கள் பயிற்சி பெற்றர்கள்.
கன்னியாகுமரியில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் வைத்து நடைபெற்ற பயிற்சியில் இடம் பெற்ற 39_இளைஞர்களுக்கும் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் சான்றிதழை வழங்கியபின், இளைஞர்கள் மத்தியில் ஆற்றிய உறையில் சீர்உடைப்பணி எதுவென்றாலும், அதில் முழுமையாக பயிற்சி பெற்று சீர்உடையுடன் பணித்தளத்தில் பணியை தொடங்கும் முன் நீங்கள் யாவரும் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி மொழி என் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், என் குடும்பத்தின் நலனுக்காகவும், எனது பணியில் நேர்மையாக ஈடுபடுவேன் என்று நீங்கள் ஒவ்வொரு இளைஞனும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என கேட்டுக் கொண்டார். நிகழ்வில் கடலோர பாதுகாப்பு குழுமம் துணை சூப்பிரண்டு பிரதாபன், குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் நவின், சிறப்பு சப் _ இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

